முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பின் இரட்டையர்களில் ஏற்பட்ட மாற்றம் நாசா வெளியிட்ட விசித்திர தகவல்

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்: விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பின் இரட்டையர்களில் ஏற்பட்ட மாற்றம் குறித்து நாசா விசித்திர தகவலை வெளியிட்டுள்ளது.

நாசாவில் விண்வெளி வீரர்களாக இருக்கும் ஸ்காட் மற்றும் மார்க்கெல்லி ஆகியோர் இந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ஸ்காட் சர்வதேச விமான நிலையத்திற்கு ஒன்றரை வருடத்திற்கு முன் அனுப்பப்பட்டார். ஆனால் அவரின் இரட்டையரான மார்க் கெல்லி பூமியிலேயே ஆராய்ச்சி செய்து வந்தார்.
தற்போது இவர்கள் இருவரும் இரட்டையர்கள் கிடையாது என்று நாசா கூறியுள்ளது. அதற்கான காரணத்தையும் நாசா தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவரும், பிரிவதற்கு முன் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரின் டி.என்.ஏ.வும் ஒரே மாதிரி இருந்துள்ளது. ஸ்காட் திரும்பி வந்த பின் சோதனை செய்வதற்காக இந்த மாதிரிகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்காட் சரியாக ஒரு வருடம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.

இந்த நிலையில் அவர் பூமிக்கு வந்த பின் சோதனை செய்யப்பட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் நிறைய மாறுபாடுகள் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பூமிக்கு திரும்பி ஆறு மாதமானதையொட்டி சென்ற வாரமும் அவரை சோதனை செய்துள்ளனர். அப்போதும் ஸ்காட்டின், டி.என்.ஏ மொத்தமாக மாறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

சரியாக 7 சதவிகிதம் இவர்கள் இருவருக்கும் வேறுபாடு உருவாகி உள்ளது. அவர்கள் முன்பு 97 சதவிகிதம் ஒரே மாதிரி இருந்ததாகவும் தற்போது 90 சதவிகிதம் மட்டுமே ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

உருவ அமைப்பிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக நாசா கூறியுள்ளது. அதே போல் ஸ்காட் பல விஷயங்களில் பின் தங்கி இருக்கிறார். அவரது வேலை செய்யும் திறன் ரொம்ப குறைந்து இருக்கிறது. இதனால் இவர்கள் இருவரும் இனி இரட்டையர்கள் கிடையாது என்று நாசா கூறியுள்ளது. இவர்களை இன்னும் சோதனை செய்ய நாசா முடிவெடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து