முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் அணியின் மோசமான சாதனை

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

இந்தியாவுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆப்கான் அணி முதல் மற்றும் 2-வது இன்னிங்ஸ் சேர்த்து 27.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் மிகவும் குறைந்த ஓவர்களை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது.

வங்காள தேசம் 2-வது இன்னிங்சில் 46.3 ஓவரில் சுருண்டது மிகவும் குறைந்த ஓவர்களை சந்தித்த அணியாக இருந்தது. தற்போது ஆப்கானிஸ்தான் முதல் இடத்திற்கு வந்துள்ளது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 47.1 ஓவரில் சுருண்டு 3-வது இடத்திலும், அயர்லாந்து 47.2 ஓவரில் சுருண்டு 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 58.2 ஓவரில் சுருண்டு 5-வது இடத்திலும், இந்தியா 59.3 ஓவரில் சுருண்டு 6-வது இடத்திலும், நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 60.3 ஓவரில் சுருண்டு 7-வது இடத்திலும், இங்கிலாந்து 66.1 ஓவரில் சுருண்டு 8-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 68 ஓவரில் சுருண்டு 9-வது இடத்திலும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து