முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை கால்பந்து: ரஷ்யா வெற்றி

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் தொடங்கியது. இதில் ரஷ்யா - சவுதி அரேபியா பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சவுதி அரேபியா இளவரசர் மொகமது பின் சல்மான், பீபா அமைப்பின் தலைவர் ஜியான்னி இன்பாண்டினோ ஆகியோர் கண்டுகளித்தனர். இப்போட்டி தொடங்கிய 12-வது நிமிடத்தில் ரஷ்யா அணியின் கசின்ஸ்கீ கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 43-வது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் இரண்டாவது கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்டத்தில் ரஷ்யா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் ரஷ்யா அணியின் டிசியூபா கோல் அடித்தார். இறுதிநேர ஆட்டத்தில் ரஷ்யாவின் டென்னிஸ் செரிஷேவ் தனது இரண்டாவது கோலை அடித்தார். அதன்பின் ரஷ்யாவில் கோலோவின் மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். சவுதி அரேபியா அணியினர் இறுதிவரை முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் ரஷ்யா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச்சென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து