முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 தோட்டாக்கள் டீமின் அடுத்த படைப்பு ஜீவி

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      சினிமா
Image Unavailable

8 தோட்டாக்கள்’ படத்தை தயாரித்த வெற்றிவேல் சரவணா சினிமாஸ் அடுத்ததாக ‘ஜீவி’ என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்கள்.

‘8 தோட்டாக்கள்’ வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் எம்.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக ‘ஜீவி’ திரைப்படம் உருவாகின்றது. இதில் 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி, மோனிகா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், மைம் கோபி, ரோகிணி, ரமா நடிக்கிறார்கள்.பாபு தமிழ் கதை, வசனம் எழுத, புதுமுக இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இயக்குகிறார். படத்தைப்பற்றி இயக்குனர் கூறும்போது, ‘இப்படம் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த தொடர்பியல் ரீதியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால் இது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வருகிறது’ என்றார்.சுந்திர மூர்த்தி இசையமைக்கும் இப்படத்திற்கு இப்படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் இப்படத்தை லைன் பிரொட்யூஸ் செய்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து