முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனைகளுக்கு பணம் தர தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அபராதம் மத்திய அரசு அதிரடி திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளுக்கு செலவுத்தொகையை தருவதற்கு தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான வரைவு அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளுக்கான செலவுத்தொகையை தருவதற்கு தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க அரசு திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைகள் கோரும் செலவுத்தொகையை 15 நாள்களுக்குள் காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்க வேண்டும். தவறினால், கொடுக்க வேண்டிய தொகைக்கு, வாரம் 1 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத்தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் நேரடியாக மருத்துவமனைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் ஏழைக் குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி, வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு 20 மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துவிட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து