முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்:

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று (18-ம் தேதி) முதல் லாரி உரிமையாளர்கள் நாடுமுழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதுதொடர்பாக அகில இந்திய தரைவழி போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ரஜிந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் ஆகியோர் கூறியதாவது: நாடு முழுவதும் 80 லட்சம் சரக்கு லாரிகள் ஓடுகின்றன. தினமும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. காப்பீட்டுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுங்கச்சாவடி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், லாரி உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த 5 மாதங்களில் டீசல் ரூ.7.45 விலை உயர்ந்துள்ளது.

மற்ற துறைகளில் அமல்படுத்தியுள்ளது போல் பெட்ரோல், டீசலும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

அப்படி கொண்டு வந்தால் லிட்டருக்கு சுமார் ரூ.20 வரை குறையும். மேலும், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீட்டு தொகையை தொடர்ந்து உயர்த்தி வருவதை ரத்து செய்ய வேண்டும், நீண்ட காலமாக சுங்கக் கட்டணம் வசூலித்து வரும் சுங்கச்சாவடிகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும். மேற்கண்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளோம். இதுதொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென வலியுறுத்தினோம். ஆனால், இதுவரையில் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

எனவே, ஏற்கனவே அறிவித்தபடி, இன்று காலை 6 மணி முதல் நாடுமுழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இந்தியா முழுவதும் 75 லட்சம் லாரிகளும் ஓடாது. இதில், தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது. ஆனால், தண்ணீர், பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் லாரிகள் வழக்கம்போல் ஓடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து