முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்தூரில் மினிலாரி கவிழ்ந்து உயிரிழந்த 9 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: சித்தூரில் மினி லாரி கவிழ்ந்து உயிரிழந்த 9 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை.,

லாரி கவிழ்ந்து...
வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், கல்நார்சம்பட்டி மற்றும்ராமநாய்க்கன்பேட்டை கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 31 நபர்கள் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் பகுதியில் மாங்காய் பறித்து விட்டு, தனியார் மினி லாரியில் வேலூர் மாவட்டத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, 16-ம் தேதி சித்தூர் மாவட்டம், கங்குணி கிராமம், பெரும்பள்ளம் என்ற இடத்தில் லாரி கவிழ்ந்தது.

9 பேர் பலி
இந்த விபத்தில் வேலூர் மாவட்டம், கல்நார்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரீசனின் மகன் சென்றாயன், சங்கரின் மனைவி புனிதா, கண்ணனின் மனைவி கமலா, சின்னதம்பியின் மனைவி செண்பகம், தீர்த்தகிரியின் மனைவி மீனாட்சி மற்றும் ராமநாய்க்கன் பேட்டையைச் சேர்ந்த சம்பத்தின் மகன் உமாபதி ஆகியோர் சம்பவ இடத்திலேயேயும்,  சின்னதம்பியின் மகன்துளசி, மோகனின் மகன்முத்து, மற்றும். தருமனின் மகன் நாராயணன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்றசெய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஒன்பது நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உடல்களை கொண்டு...
இந்த விபத்தில் 22 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்துநான் வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேலூர் மாவட்டநிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்து குறித்து அறிந்தவுடன், இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உடனடியாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும்செய்ய வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் கொண்ட குழுஒன்றினை ஆந்திர மாநிலத்திற்கு உடனடியாக அனுப்ப நான் உத்தரவிட்டிருந்தேன். எனது உத்தரவின் பேரில், அதிகாரிகள் விரைவான நடவடிக்கை மேற்கொண்டதில், சித்தூர் மாவட்ட நிருவாகத்தின் உதவியுடன், இறந்தவர்களின் உடல்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

தலா ரூ.1 லட்சம்...
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உயரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்ஆகியோருக்கு நான் உத்தரவிட்டேன். இந்த துயரச் சம்பவத்தின் தன்மையையும், இறந்தவர்களின் குடும்ப வறியநிலையையும் கருத்தில் கொண்டு, உயிரிழந்த ஒன்பது நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/-ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து