முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவோயிஸ்ட் காளிதாஸ் திண்டுக்கல் கோர்டடில் ஆஜர்

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      திண்டுக்கல்
Image Unavailable

 திண்டுக்கல், -  கேரள சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் காளிதாஸ் கொடைக்கானல் வழக்கு தொடர்பாக திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 2008ம் ஆண்டு மாவோயிஸ்ட்டுகள் ஆயுதப்பயிற்சி மேற்கொள்வதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாருக்கும், மாவோயிஸ்டு கும்பலுக்கும் நடந்த மோதலில் நவீன் பிரசாத் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் தங்கியிருந்த மேலும் 8 பேர் தப்பியோடி விட்டனர். ஞிலமேகம், கண்ணன்,ரஞ்சித், ரீனாஜாய்மேரி, செண்பகவள்ளி, பகத்சிங் ஆகியோரை போலீசார் தமிழகம், கேரளா, கர்நாடகா என பல்வேறு இடங்களில் வைத்து கைது செய்தனர். இதில் ரஞ்சித் மட்டும் ஜாமீனில் வெளிவந்துள்ளார். மற்ற அனைவரும் சிறையில் உள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய காளிதாஸ் என்ற மாவோயிஸ்டை கேரள போலீசார் கைதுசெய்தனர். கேரள வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்டதாக அவர் கைதுசெய்யப்பட்டு கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை கொடைக்கானல் வழக்கு தொடர்பாக விசாரிக்க அனுமதி கேட்டும், திண்டுக்கல் ஞிதிமன்றத்தில்ஆஜர்படுத்தவும் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் இதற்கு ஞிண்ட காலமாக அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து திண்டுக்கல் ஜே.எம்.2 கோர்ட் பிறப்பித்த உத்தரவின் பேரில் கண்ணூர்சிறையில் இருந்து காளிதாஸ் திண்டுக்கல் கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அவரை கொடைக்கானல் வழக்கு தொடர்பாக விசாரிக்க போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்டு மாஜிஸ்திரேட்டிடம் மனு அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து