முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவி. கலசலிங்கம் பார்மஸி 2 வது பட்டமளிப்பு விழா !

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர், - ஸ்ரீவி. அருள்மிகு கலசலிங்கம் பார்மஸி கல்லூரியில்  2வது பட்டமளிப்பு விழா  கலசலிங்கம்  பார்மஸி  கல்லூரி  செயலர்  முனைவர் எஸ். சசிஆனந்த்  தலைமையில் நடைபெற்றது.
கலசலிங்கம்  பல்கலை துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர் பட்டமளிப்பு விழாவை துவக்கிவைத்தார்.
கல்லூரி முதல்வர் என். வெங்கடேசன்  வரவேற்புரையாற்றினார்.
சென்னை  மருத்துவக்கல்லூரி துணை முதல்வர்,  மருத்துவர்  சுதா சேஷய்யன்,  37 பி. பார்ம், 8 எம். பார்ம்  மாணவ,  மாணவிகளுக்கு  பட்டங்களை  வழங்கி  விழா  பேரூரை ஆற்றினார்.
விருதுநகர்  அரசு  மாவட்ட  தலைமை மருத்துவமனை  மூத்த  அறுவை சிகிச்சை நிபுனர்  மருத்துவர்             ஜி.  குருநமச்சிவாயம்  முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் முன்னாள் எம். ஜி ஆர் மருத்துவ பல்கலைக்கழக பதிவாளர்,   மருத்துவர் சுதா சேஷய்யன் பேசுகையில்,   இந்த  விழாவில்  பட்டங்கள் மட்டும்  வழங்கப்படுவதில்லை.  மாணவர்கள் முழுமையாக  மருந்தாளுநராக  மாறும்  அதிகாhரத்தையும்  வழங்கும் நாளாகும்
மேற்கித்திய  அறிஞர்  ஆஸ்கர் வார்ட் கூறியதுபோல  மருந்துகளை  நிறைய சாப்பிடவேண்டும்  உடனே  குணமாகவேண்டும்  என்ற  ஆசை  அனைவருக்கும் உண்டு.  எனவே  மருந்துகள்,  மருந்து தயாரிக்கப்பயன்;படும் பொருள்கள் சமுதாயத்திற்க்கு  தேவைதான்.    ஆனால்  அதை  அளவு, நேரம்  தெரிந்து  சரியாக கையாளும் முறை  மருத்துவர்களை  விட  மருந்தாளுநர்களுக்குத்தான்  சரியாகத்தெரியும்  என்றார்.  எனவேதான்  தற்பொழுது  டி. பார்ம்,  பி. பார்ம்,  எம். பார்ம் போன்ற படிப்புகளோடு பார்ம்-டி -  டாக்டர் இன் பார்மஸி என்ற  6வருட படிப்பும் சிறப்பாக நடந்துவருகிறது
அவர் மேலும் பேசுகையில்,  மருந்தாளுநர்கள்  சமுதாயத்தில்  பொறுப்புடன்  பணிசெய்யவேண்டும்  பெற்றோர்கள்,  ஆசிரியர்கள் பயின்ற  கல்லூரி  மூன்றையும் மறக்காமல்  திருப்தியுடன்  பணியாற்றவேண்டும்.  எவ்வளவு  சாதனை புரிந்தாலும்  அந்த  சாதனைக்கு காரணம்  மக்கள்  தோள் மீது  சாய்ந்து  சாதனைபுரிந்தேன்  என்று சொன்ன சர் ஐ சக் நியூட்டன் போல் வாழ்வில்  முன்னோருடைய அனுபவம்  மற்றும்  அதனை அறிந்துகொண்டுதான்  அதிக சாதனைகளை  செய்யமுடியும் என்பதை  மாணவர்கள் உணரவேண்டும்.
அதே  சமயம் இந்திய நாட்டின் குடிமகன்  என்பதற்க்கும்  கர்வம்கொள்ளவேண்டும்.   ஏனென்றால்  பல நாடுகள்  வளர்ந்து  ஜொலித்தாலும்  நுண்ணறிவு,  கடின உழைப்பு இரண்டும்  சேர்ந்து  இருப்பது இந்தியாவில் மட்டும் தான்  என்று  கூறினார்.
உலகில்  அனைவருக்கும்  ஒரு  நாளைக்கு  24 மணிநேரம் மட்டும் தான் பொதுவானது  ஆனால்  அதனை  சரியாகப்பயன்படுத்துபவர்கள்தான் சாதனையாளர்களாக  உருவாக முடியும். என்று  மாணவர்களுக்கு  அறிவுரை கூறினார்.
பேராசிரியர்கள் திருப்பதி குமரேசன் பி. பார்ம்  மாணவர்கள்  பட்டியலையும்,  பேராசிரியை ஜெய ஆனந்தி   எம். பார்ம்  மாணவர்கள் பட்டியலையும் வாசிக்க,  சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார்.
கல்லூரி  முதல்வர்  “மருந்தாளுநர்  உறுதி மொழி “ வாசிக்க  பட்டம் பெற்ற மாணவர்கள்  எழுந்துநின்று  உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
விழாவில்  மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வருகை தந்து கலந்துகொண்டனர்.  விழா ஏற்பாடுகளை  கல்லூரி பேராசிரியர்கள்,  மாணவர்கள் சிறப்பாக  செய்திருந்தாhகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து