முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: தண்ணீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவும் என்று அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள கார்னேஜி மெல்லோன் பலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சிலர் தண்ணீரைத் தூய்மைப்படுத்த உதவும் மரம், செடி, கொடிகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவும் என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் குறைந்த செலவில் நீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவுகிறது என்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கார்னேஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முருங்கை மரத்தை தண்ணீரைத் தூய்மையாக்க பயன்படுத்த முடிவு செய்தனர். அதன்படி எப்-சான்ட் என்ற பொருளை உருவாக்கியுள்ளனர். ஒரு தொட்டியில் மணலைப் பரப்பி அதன் மேல் சிலிக்கான் துகள்களைக் கொட்டி பின்னர் முருங்கை கீரை, விதையிலிருந்து எடுக்கப்பட்ட புரதச் சத்துகளை பரவலாக வைப்பதே எப்-சான்ட் என்பதாகும். இந்த எப் சான்ட் என்பது மிகவும் குறைந்த செலவில் நீரைத் தூய்மையாக்க உதவுகிறது. நீர் சுத்திகரிப்பானாக முருங்கை பயன்படுத்தப்படுகிறது.

மேலும் எப்-சான்ட் மூலம் தண்ணீரைச் செலுத்தும்போது அதிலிருக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகின்றன. மேலும் தேவையில்லாத பொருட்கள் வடிகட்டப்படுகின்றன. நீரிலிருந்து அசுத்தங்கள் நீக்கப்படுகின்றன. இதன்மூலம் தண்ணீர் நீண்ட நாட்களுக்கு சுத்தமாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து