முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி முறிந்தது : ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பாரதிய ஜனதா - முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. நேற்று திடீரென விலக்கிக் கொண்டது. இதையடுத்து முதல்வர் மெகபூபா முப்தி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கவர்னர் வோராவிடம் கொடுத்தார். இதையடுத்து இம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி விரைவில் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

45 எம்.எல்.ஏக்கள்...

87 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 2014-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி 28, பாரதிய ஜனதா கட்சி 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றி பெற்றன. காஷ்மீரில் பெரும்பான்மையை 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. இதனால் 2014-ம் ஆண்டு ஆட்சி அமைவதில் 3 மாதங்கள் இழுபறி நீடித்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் ஜனநாயகக் கட்சியும், பா.ஜ.க.வும் இணைந்து ஆட்சி அமைத்தன. மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சையது முதல்வரானார். பா.ஜ.க.வின் நிர்மல்குமார் சிங் துணை முதல்வரானார்.

புதிய முதல்வராக...

2016-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் முப்தி முகமது சையது காலமனார். அவர் மறைவைத் தொடர்ந்து புதிய முதல்வராக மெகபூபா முப்தி உடனடியாக பதவியேற்கவில்லை. இதையடுத்து காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீரில் ஆயுதப் படை சட்டத்தை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மெகபூபா முப்தி. இதில் இழுபறி நீடித்ததால் காஷ்மீரில் புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டது. மீண்டும் சில மாதங்களுக்கு பின் மெகபூபா முப்தி முதல்வரானார். அவர் பதவி ஏற்றது முதலே பா.ஜ.க.வுடன் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன.

ஆதரவு வாபஸ்

இதன் உச்சகட்டமாக ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு காஷ்மீரில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதை மெகபூபா முப்தி விரும்பவில்லை. இப்படி அதிருப்தி நீடித்த நிலையில் காஷ்மீர் பா.ஜ.க.வினரை டெல்லிக்கு வரவழைத்தார் அமித்ஷா. இந்த ஆலோசனையின் முடிவில் மெகபூபா அரசுக்கான ஆதரவை பா.ஜ.க. வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் காஷ்மீரில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் இந்த இரண்டு கட்சிகளிடையே நிலவி வந்த கூட்டணி முறிவுக்கு வந்தது.

அதிர்ச்சியடைவில்லை...

இதையடுத்து, அந்த மாநிலத்தின் முதல்வர் மெகபூபா முப்தி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் வோராவிடம் அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மெஹபூபா முப்தி கூறியதாவது, கவர்னரிடம் எனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளேன். இனி யாருடனும் கூட்டணியை நீட்டிக்கப் போவதில்லை என்று கவர்னரிடம் தெரிவித்து விட்டேன். தொலை நோக்கு பார்வையுடனும், மக்கள் நலனுக்காகவும் தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தேன். ஆட்சி அதிகாரத்துக்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கவில்லை. பா.ஜ.க. ஆதரவை துண்டித்ததால் அதிர்ச்சியடைவில்லை. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவே நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

காஷ்மீர் சட்டசபை:

மொத்தம் - 87 இடங்கள்
பிடிபி    - 28.
பாஜக    - 25.
என்.சி    - 15.
காங்கிரஸ்- 12.
மக்கள் மாநாட்டு கட்சி - 2.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 1.
மற்றவை - 4.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து