முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி ஆணையம் குறித்த குமாரசாமி கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டுமென குமாரசாமி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று மு.க.ஸடாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தங்களின் பிரதிநிதியை நியமிப்பதில் காலம் தாழ்த்தி விட்டு, கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, காவிரி வரைவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடமும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடமும் முறையிட்டிருக்கிறேன் என்று கூறியிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க விடாமல், பின்னடைவு செய்யும் நோக்கத்துடன் முடக்கி வைக்கும் போக்கை கர்நாடக மாநில முதல்வர் மேற்கொள்வதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது.  இதுவரை தாமதத்திற்கு மேல் தாமதம் செய்தது போதும். இனியும் எந்தவிதத் தாமதத்தையும் தமிழகம் தாங்கிக் கொள்ளாது. இவ்வாறு அதில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து