முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலம் முழுவதும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 பேர் குடும்பத்திற்கு ரூ.54 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் முழுவதும் மின்சாரம் தாக்கி இறந்த 18 பேரின் குடும்பத்திற்கு ரூ.54 லட்சம் நிதி உதவி வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:-

காஞ்சிபுரம் - நாமக்கல்

கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், கொமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முகம்மது ஷெரிப் மின்பராமரிப்பு பணி மேற்கொள்ளும்போதும், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், தேன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபானி அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கியும்,  காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் பணி செய்யும்போது மின்சாரம் தாக்கியும்,  புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், அரசமலை சரகம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதும், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், புதுக்கோட்டை கிராமம், காளிசெட்டிபட்டி புதூரைச் சேர்ந்த சரோஜா அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கியும், அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டம், மேலக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசுவின் மனைவி சத்தியப்பிரியா வயலில் இருந்து புல்கட்டு தூக்கி வரும்போது மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

தஞ்சாவூர் - விழுப்புரம்...

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், உள்ளுர் கிராமம், கொரநாட்டுக்கருப்பூரைச் சேர்ந்த ஆனந்குமாரின் மகன் தமிழழகன் நீர்தொட்டியின் மின்சார பொத்தானை தொட்டபோது மின்சாரம் தாக்கியும், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனனின் மகன் சுப்பிரமணி விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கியும், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், நட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிதாஸின் மின்சார கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கியும்,  விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வீரமணியின் மகள் தர்ஷினி மின்சாரம் தாக்கியும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பியம் கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்துவின் மகன் பொன்னுசாமி வயலில் உள்ள மின் மோட்டார் கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

ராமநாதபுரம் - நெல்லை...

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கோவிலாங்குளம் உள்வட்டம், பூமாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் கணேசன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கியும், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வீரக்கல் கிராமம் உட்கடை நாகப்பன்பட்டியiச் சேர்ந்த வெங்கட்ராமனின் மகன் வினோத்குமார் வேப்ப மரத்தில் ஏறி ஆடுகளுக்கு தழைகள் பறித்துக்கொண்டிருந்தபோது அவ்வழியே செல்லும் உயர்மின் அழுத்த மின்சார கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கியும், திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், கொடிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவத்தேவரின் மகன் புதியவன் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

கிருஷ்ணகிரி - கடலூர்...

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், ஆர். புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் மகன் பசுபதி ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளைக் கிணற்றை சரிசெய்யும் பணியின் போது, மின்சாரம் தாக்கியும், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மாவத்தூர் கூட்டுரோட்டைச் சேர்ந்த மாணிக்கத்தின் மகன் ராஜேந்திரன் என்பவர் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கியும், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், அரங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் பிரஷாந்த் என்பவர் வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றபோது மின்கம்பத்திலிருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியும், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் பிரபு பழனி வட்டம், முத்துநாகக்கன்பட்டி கிராமத்தில் மின் மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

தலா ரூ.3 லட்சம்...

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 18 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவங்களில் உயிரிழந்த 18 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து