முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தென்கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்பசலனம்...

இது குறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். அதே நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. 

கடல் சீற்றத்துடன்...

மேலும் தென் தமிழக கடலோரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் கடல் காற்று அதிகமாக இருக்கும். அந்தமான் கடற்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், குளச்சல்-கீழக்கரை வரையில் உள்ள கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

வெயில் தாக்கம்...

தென்மேற்கு திசையில் 35 கி.மீ முதல் 55 கி.மீ வரை காற்று வீசக் கூடும். காற்றின் வேகம் காரணமாக கடல் அலைகள் 3.5கி.மீ முதல் 3.7கி.மீ வரை எழும்பும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, திண்டுக்கல், நெல்லை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், தற்போது அங்கும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரித்து இருக்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து