முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடி கார் நிறுவனத்தின் சி.இ.ஓ கைது..!

புதன்கிழமை, 20 ஜூன் 2018      வர்த்தகம்
Image Unavailable

ஜெர்மனியை சேர்ந்த பிரபல வோக்ஸ்வேகன் கார்  நிறுவனத்திற்கு சொந்தமானதுதான் ஆடி சொகுசு கார்கள். ஆடம்பர சொகுசு காரான ஆடி, வோக்ஸ்வேகன் நிறுவனதின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆடி கார் நிறுவனம் டீசல் எமிஷன் (புகை வெளியேற்றி) விவரங்களை மறைப்பதற்காக தங்கள் தயாரிக்கும் சொகுசு கார்களில் நவீன சாப்ட்வேர் கருவிகளை பொருத்தி சுற்றுச்சூழலை அதிக மாசு ஏற்படுத்தியதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆடி கார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ருபர்ட் ஸ்டாட்லர் பொய்யாக ஏமாற்றி விளம்பரம் செய்து தனது கார்களை விற்று மோசடியில் ஈடிபட்டடுள்ளார் என்று அவர் மீது வழக்குப் போடப்பட்டது. இந்நிலையில் ஜெர்மனி முனிச் நகர நீதிமன்றத்தில் கடந்த வாரம் இந்த வழக்கின் மீதான விசாரணை வந்தபோது, டீசல் எமிஷன் விவகாரத்தில் ஸ்டாட்லர் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற காரணத்திற்காக அவரை கைது செய்ய நீதிபதி உத்தவிட்டடார். எனவே ஸ்டாட்லர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து