முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தொடரும் - ராணுவ தலைமை தளபதி பேட்டி

புதன்கிழமை, 20 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ள கவர்னர் ஆட்சியால் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதிப்பு ஏற்படாது என ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

சந்தித்து ஆறுதல்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்திச் சென்று கொல்லப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசிப் குடும்பத்தாரை சமீபத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  ரம்ஜான் நோன்பு காலத்தை கருத்தில் கொண்டு காஷ்மீரில் ராணுவத்தின் சார்பில் அமல்படுத்தப்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் ரம்ஜான் பண்டிகைக்கு பின்னர் நீட்டிக்கப்பட மாட்டாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக அறிவித்தார். இதை தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் வழக்கம்போல் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிப்பு ஏற்படாது

மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கவர்னர் ஆட்சியால் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதிப்பு ஏற்படாது என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, டெல்லியில் நேற்று பேட்டியளித்த பிபின் ராவத், ‘காஷ்மீரில் ரம்ஜானுக்காக நாங்கள் போர் நிறுத்தம் அறிவித்தோம். அதனால் என்ன ஆனது? என்பதை நாம் பார்த்தோம். அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதால் எங்கள் நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வழக்கம்போல் பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களது பணிகள் தொடரும். எவ்வித அரசியல் தலையீடும் எங்களுக்கு இருக்காது’ என குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து