முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்: காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்

புதன்கிழமை, 20 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பா.ஜ.க.வுடனான  கூட்டணி முறிவு ஏற்பட்டதையடுத்து முதல்வராக இருந்த மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. கவர்னரின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

கூட்டணி ஆட்சி...

87 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 2014-ம் ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவில் தொங்கு சட்டசபை அமைந்தது. இதையடுத்து மக்கள் ஜனநாயக கட்சியுடன் பா.ஜ.க. கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தன. மெகபூபா முப்தி முதல்வரானார். பாகிஸ்தான் பயங்கரவாதம், உள்ளூர் பயங்கரவாதம், இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்தில் சேர்தல், பிரிவினைவாதிகள் தூண்டிவிடுதல், பாதுகாப்பு படைகளுக்கு எதிரான கல் வீச்சு சம்பவம் மற்றும் பிற வன்முறை சம்பவங்களால் மாநிலத்தின் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்தது. இதனால் பாதுகாப்பு படைகள் காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை தொடர்ந்தது.

கருத்து மோதல்

இந்நிலையில் ரமலான் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால்  போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் பயங்கரவாதிகள் தரப்பில் துப்பாக்கி சூடு மற்றும் கையெறி குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்விவகாரத்தில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜனதா இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதன் முலம் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக பா.ஜ.க. அறிவித்தது. அதை தொடர்ந்து மெகபூபா முப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் கடிதம் கொடுத்தார். இதனையடுத்து மாநிலத்தில் நேற்று கவர்னர் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. கவர்னரின் பரிந்துரையை ஏற்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து