முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி

புதன்கிழமை, 20 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

ஸ்ரீவில்லிபுத்தூர்: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை 5-வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான அழைத்து செல்ல முற்பட்டதாக கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையை தொடர்ந்து காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டனர்.

நிர்மலாதேவி ஜாமீன் வழங்கக்கோரி சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுகளில் மனுத்தாக்கல் செய்தார். இதுவரை தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு 18-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பேராசிரியர் முருகன் சார்பிலும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என போலீஸ் தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். முருகனின் ஜாமீன் மனு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து