முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலைதளங்களில் தவறாக விமர்சிப்பதா? மனசாட்சிப்படியே தீர்ப்பளிப்பதாக தலைமை நீதிபதி இந்திரா உருக்கம்

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: நாங்கள் மனச்சாட்சி படி தீர்ப்பு வழங்குகிறோம் என்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் புதியதாக குடும்ப நல நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம் மற்றும் கூடுதல் மகளிர் நீதிமன்றம் ஆகியன அமைக்கப்பட்டன. இந்த நீதிமன்றங்கள் தொடக்க விழா நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானார்ஜி, நீதிபதிகள் வேலுமணி, தாரணி , மின் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நீதிமன்றங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

விழாவில் இந்திரா பானர்ஜி பேசியதாவது, நாட்டில் விவாகாரத்தும், முறையற்ற திருமணங்களும் அதிகரித்து வருகிறது. இதனால் குடும்ப நல வழக்குகள், நீதிமன்றங்களுக்கு வருகின்றன. இவ்வாறான போக்குகளால், அந்த குடும்பங்களின் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும்.

குடும்ப நல நீதிமன்றங்களில் தாமதமான தீர்ப்பு, ஏழை பெண்களையும், ஏழை குழந்தைகளையும் அதிகம் பாதிக்கும் என்பதால், வழக்கறிஞர்கள் திருமண உறவுகளை பாதுக்காக்க முயல வேண்டும். தங்கள் கட்சிக்காரர்களுக்கு  நல்ல ஆலோசகர்களாக இருக்க வேண்டும்.

நாங்கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள், அதனால் இங்கு தரப்படும் தீர்ப்புகளால் எங்களுக்கு ஒன்றும் இல்லை. நாங்கள் கடவுளுக்கு மட்டுமே உண்மையாக இருப்போம். நாங்கள் மனச்சாட்சிப் படி தீர்ப்பு வழங்குகிறோம்.

ஆனால் பல சமூக ஊடகங்கள், வலைத்தளங்களில் தீர்ப்பு குறித்து விமர்சனங்கள் தவறாக வருகிறது. நீதிபதிகளை சிலர் வியாபார நோக்கத்திற்காக விமர்சிக்கிறார்கள். விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் சட்டப்படி, நியாயப்படி செயல்பட்டு தீர்ப்புகளை வழங்க வேண்டும். இவ்வாறு இந்திரா பானர்ஜி குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து