முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடரும் அணு ஆயுத அச்சுறுத்தல் : மீண்டும் வட கொரியா மீது அமெரிக்க தடைவிதிப்பு

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : வடகொரியாவின் அணு ஆயுதங்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டின் மீதான தடைகளை புதுப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

போர் பயிற்சிகள் ரத்து

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் யுன் இடையே ஒரு வரலாற்று சந்திப்பு நிகழ்ந்தது.வடகொரியா அதிபர் கிம் ஜாங் யுன், அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதாக அறிவித்தார். அதற்கு பதிலாக தென்கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபடமாட்டோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில் அதிபர் டிரம்ப் கூறியதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ போர் பயிற்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தடைகள் புதுப்பிப்பு

இந்த அறிவிப்பு வெளியாகி பத்தே நாட்கள் ஆன நிலையில், வட கொரியாவின் அணு ஆயுதங்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக கருத்து தெரிவித்த, அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீதான தடைகளை புதுப்பித்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வட கொரியாவின் அணுசக்தி ஆயுதங்களைப் பயன்படுத்தி "அசாதாரண மற்றும் அசாதாரணமான அச்சுறுத்தல்" தொடர்கிறது என்று கிம் ஜாங் யுன் ஆட்சியின் மீதான தடைகளை விரிவுபடுத்தியுள்ளார்.

முரண்பாடுகள்...

இந்த நிலையில் அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனநாயக கட்சி, சிங்கப்பூர் உச்சிமாநாடு வெற்றி பெற்றதாக தற்பெருமையுடன் டிரம்ப் கூறியதற்கும், தற்போதைய நடவடிக்கைக்கும் அதிக முரண்பாடுகள் இருப்பதாக கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து