முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை முகாம்களில் காஷ்மீர் கவர்னர் வோரா ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் குறித்து அங்குள்ள முகாம்களில் மாநில கவர்னர் என்.என்.வோரா  ஆய்வு மேற்கொண்டார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் புனித யாத்திரை, வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, கவர்னரும், அமர்நாத் கோயில் நிர்வாகத் தலைவருமான என்.என்.வோரா, ஷேஷநாக் முகாமுக்கு சென்று அங்கு யாத்ரீகர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, யாத்ரீகர்களுக்கு குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று முகாம் இயக்குநருக்கு வோரா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, பஹல்காம் ஹெலிபேட் முகாமுக்குச் சென்ற அவர், அங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள யாத்ரீகர்கள் காத்திருப்பு மண்டபத்தை திறந்து வைத்தார்.

இதையடுத்து, சந்தன்வாரிக்குச் சென்ற வோரா, அங்கு புனரமைக்கப்பட்டு வரும் சந்தன்வாரி நுழைவாயில் பணிகளைப் பார்வையிட்டார். மேலும், அங்குள்ள உணவுக் கூடங்கள், கடைகள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். அங்கிருந்து, நுன்வான் யாத்திரை முகாமுக்கு வந்த அவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராணுவம், காவல் துறை உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து