முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஷல்ஸ் தீவில் இந்திய ராணுவ தளம்: இணைந்து பணியாற்ற அதிபர் டேனி - பிரதமர் நரேந்திர மோடி உறுதி

திங்கட்கிழமை, 25 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : செஷல்ஸ் தீவில் இந்திய ராணுவ தளம் அமைப்பது தொடர்பாக இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் என்று செஷல்ஸ் அதிபர் டேனி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளனர்.

6 நாள் பயணமாக...

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள செசல்ஸ் அதிபர் டேனிக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. செசல்ஸ் அதிபர் டேனி பயூரே 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக சனிக்கிழமை குஜராத் மாநிலத்தில் உள்ள சமர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். ஞாயிறன்று உலக பாரம்பரிய இடமான பழைய கோவாவில் தனது உயர்மட்டக் குழுவினருடன் சென்று சுற்றிப் பார்த்தார். அங்குள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கும் சென்று பார்வையிட்டார்.

சிவப்பு கம்பள வரவேற்பு

இந்நிலையில், செசல்ஸ் அதிபர் டேனி டெல்லியில் நேற்று மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஜனாதிபதி மாளிகை சென்ற அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவரை வரவேற்றனர். 

இந்தியா திட்டம்...

இந்திய பெருங்கடலில் இருக்கும் நாடான செஷல்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள அஸ்சம்ப்சன் தீவில் இந்திய கடற்படை தளம் அமைக்க கடந்த ஜனவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கடற்படை தளம் அமைந்தால் இந்திய பெருங்கடல் பிராந்தியம் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் சீனாவின் கை ஓங்காது என

இந்தியா கணக்கிட்டது.

ஆனால், இந்த திட்டத்தால் தமது நாட்டு பகுதியை இன்னொரு நாட்டுக்கு தாரை வார்த்தது போல ஆகிவிடும் என குற்றம் சாட்டிய செஷல்ஸ் எதிர்க்கட்சிகள், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இதனால், இந்த திட்டத்திற்கான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை.

செஷல்சுக்கு நிதியுதவி

இந்த சூழ்நிலையில், நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்த சந்திப்பின்போது, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். குறிப்பாக, அஸ்சம்ப்சன் தீவில் இந்திய கடற்படை தளம் அமைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சந்திப்பின் முடிவில் இருநாடுகளுக்கு இடையே சில துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. செஷல்ஸ் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக இந்தியா அறிவித்தது. இதனை அடுத்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த போது, இரு நாடுகளின் உரிமைகளின் அடிப்படையில் அஸ்சம்ப்சன் தீவில் இந்திய கடற்படை தளம் அமைப்பதில் இணைந்து பணியாற்ற உறுதியுடன் இருப்பதாக கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து