முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு இனி எளிதாக விண்ணப்பிக்க செயலி அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்க வழி செய்யும் பாஸ்போர்ட் சேவா எனப்படும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்ல விரும்புவர்கள் பொதுவாகவே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது என்பது நடைமுறை சிக்கல்கள் சார்ந்ததாக உள்ளது. விண்ணப்பதாரர்கள் இருக்கும் மாநிலத்தில் பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகங்கள் இல்லாமல் இருந்தால், அண்டை மாநிலங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.

அதே போல ஒரு சில மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளதால், மாநிலத்திற்குள்ளேயே சில நூறு கிலோ மீட்டர் பயணம் செய்துதான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் சூழலும் இருந்து வருகிறது.

இந்நிலையில் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்க வழி செய்யும் பாஸ்போர்ட் சேவா எனப்படும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளதாவது,
நீங்கள் நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே அலைபேசி மூலம் விண்ணப்பிக்கும் பாஸ்போர்ட் சேவா’ என்னும் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் குறிப்பிடும் முகவரியில் போலீஸ் துறையின் வழக்கமான சரிபார்ப்பு பணிகள் முடிந்த பின்னர் தபால் மூலம் பாஸ்போர்ட் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய முறையின் மூலம் பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகள் மிக துரிதமாகவும், சுலபமாகவும் முடியும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பாஸ்போர்ட் சேவா ஆப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கே வந்து காவல்துறையினர் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் காவல்துறையால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், விண்ணப்பிக்கப்பட்ட முகவரிக்கு பாஸ்போர்ட் அனுப்பப்படும் என்றும், மேலும், திருமணமான பெண்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க திருமண சான்றிதழ் தேவையில்லை; விவாகரத்து பெற்ற பெண்கள் முன்னாள் கணவர் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை என்றும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து