முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எமர்ஜென்ஸி காலத்தை கருப்பு தினமாக அனுசரிப்பது ஏன்? பிரதமர் மோடி விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை: காங்கிரஸ் கட்சியை விமரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எமர்ஜென்ஸி தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கவில்லை என்றும், இந்திய வரலாற்றில் ஒரு கறையாக எமர்ஜென்ஸி காலம் உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மும்பையில் நேற்று பா.ஜ.க. தொண்டர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி,

காங்கிரஸ் கட்சியை விமரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எமர்ஜென்ஸி தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கவில்லை. நாட்டில் என்ன நடந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். எமர்ஜென்ஸி காலத்தில் என்ன நடந்தது என்றோ, சுதந்திரம் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்றோ இளைஞர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

அரசியலமைப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. நீதித்துறை பெரும் அச்சத்தில் இருந்துள்ளது. சட்டத்தைக் காப்பாற்ற பெரும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்தின் அதிகாரப் பசிக்காக ஒரு நாடே சிறைச்சாலையாக மாற்றப்படும் என்று மக்கள் நினைக்கவில்லை. ஒவ்வொருவரும் அச்சத்துடன் வாழ்ந்தனர் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து