முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி உயர்வால் அதிருப்தி: அமெரிக்காவிலிருந்து ஹார்லி டேவிட்சன் வெளியேறும் முடிவிக்கு டிரம்ப் கண்டனம்

புதன்கிழமை, 27 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன் ஆலைகள் வேறு நாடுகளுக்கு மாறுவதற்கு அதிபிர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வரியை உயர்த்தியது...
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு இறக்குமதிக்கு 25 சதவீதமும், அலுமினியம் இறக்குமதிக்கு 10 சதவீதமும் வரி விதித்து கடந்த மார்ச் மாதம் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இது ஐரோப்பிய நாடுகளுக்கு பெருத்த அடியாக அமைந்தது. இதையடுத்து அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற போர்போன் விஸ்கி, மோட்டார் சைக்கிள்கள், ஆரஞ்சு பழச்சாறு உள்ளிட்ட பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 2.8 பில்லியன் யூரோ (சுமார் ரூ.22 ஆயிரத்து 120 கோடி) வரி விதிப்பை அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது.

ஹார்லி டேவிட்சன் முடிவு
இது அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள்களை தயாரித்து வரும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக ஐரோப்பிய சந்தைக்கான தனது மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் ஆலைகளை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றி, வேறு நாடுகளில் அமைக்க ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முடிவு எடுத்து உள்ளது.

அதிபர் டிரம்ப் கண்டனம்
இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் அவர், ‘‘முதலில் (ஐரோப்பிய ஒன்றியத்துக்கு) ஹார்லி டேவிட்சன் வெள்ளைக்கொடி காட்டுவது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த நிறுவனத்துக்காக நான் கடினமாக போராடினேன். இறுதியில் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விற்பனை செய்யக்கூடிய மோட்டார் சைக்கிள்களுக்கு வரி செலுத்த மாட்டார்கள். இது நமது வர்த்தகத்தை மோசமாக பாதித்து உள்ளது’’ என கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து