முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறக்குமதி வரியை அதிகரிப்பது ஏன்? டிரம்ப் விளக்கம்

வியாழக்கிழமை, 28 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் சீரற்ற வர்த்தக நிலையை சரி செய்யவே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

அண்மையில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 நாடுகள் மாநாட்டில் கூட, ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள், அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளாக உள்ளன. எனினும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்த நாடுகள் 100 சதவீத வரியை விதிக்கின்றன. ஆனால், இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்காவில் வரி விதிக்கப்படுவதில்லை.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது விதிக்கப்படும் வரியை 75 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகக் குறைப்பதற்கு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா முடிவு செய்தது. எனினும், அமெரிக்காவைப் போல், இந்தியாவும் இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு இரு சக்கர வாகனத்துக்கும் வரி விதிக்கக் கூடாது என்று கூறினேன். மேலும், அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைப்பதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வரவில்லை. அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கு முடிவு செய்துள்ளோம்.

அமெரிக்காவில் இரும்பு உருக்குத் துறை நலிவடைந்த நிலையில், இருந்தது. அந்தத் துறையை வலுப்படுத்தவே, இரும்பு உருக்கு பொருள்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினோம். வரியைக் குறைக்க வேண்டும் என விரும்பும் நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். அதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து