முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்கட்சிகளுக்கு பதவிப் பேராசை பிரதமர் நரேந்திர மோடி தாக்கு

வியாழக்கிழமை, 28 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ,  கபீர் அகடமி கல்வெட்டை திறந்து வைத்த பிரதமர் மோடி நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்திய கட்சியும், அதை எதிர்த்து போராடிய கட்சிகளும் உத்தரப் பிரதசத்தில் ஒன்றாக இணைந்து பதவிப் பேராசையுடன் ஏழை - எளிய மக்களை ஏமாற்றுகின்றன என பிரதமர் மோடி கூறினார்.

2019-ம் ஆண்டின்  மக்களவை தேர்தலுக்காக  பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று திரண்டு வருகின்றன. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வை எதிர்த்து சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றாக சேர்ந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. இதனால் அங்கு வலிமையான எதிர்ப்பை சந்திக்கும் சூழல் பா.ஜ.க.வுக்கு  உள்ளது.

இந்நிலையில் கபீர் தாசரின் 500வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி, வாரணாசி அருகே உள்ள மஹர் நகரில் நிகழ்ச்சி நடைபெற்றது.

15-ம் நூற்றாண்டில் பிறந்த கவிஞரான கபீர் தாசர் வாரணாசியில் பிறந்து, மஹர் நகரில் மறைந்தார். அவரது மறைந்த 500வது ஆண்டு தின நிகழ்ச்சி மஹர் நகரில் நடந்தது. வாரணாசி தொகுதி எம்.பி.யான பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கபீர் தாஸரின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி அங்கு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், பிரச்சார தொடக்கமாகவும் அவரது பேச்சு அமைந்தது. கூட்டத்தில் உ.பி எதிர்கட்சிகளை பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

அவர் பேசுகையில் ‘‘நெருக்கடிநிலையை அமல்படுத்தியவர்களும், அதனை எதிர்த்து போராடியவர்களும் பதவி பேராசையுடன் இன்று கைகோர்த்து செயல்படுகின்றனர். சமாஜ்வாதி, பகுஜன் என்று பெயர் வைத்துக் கொண்டு ஏழை, எளிய மக்களை ஏமாற்றுவதே இந்த கட்சிகளின் குறிக்கோள்.
இதுபோன்ற கட்சிகளிடம் இருந்து மக்கள் உஷாராக இருக்க வேண்டும். தங்களை பற்றியும், தங்கள் குடும்ப உறுப்பினர்களை பற்றி மட்டுமே சில அரசியல்வாதிகளுக்கு கவலை. தங்கள் உறவினர்கள் பெயர்களில் சொத்து வாங்கி குவிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர்.

தங்கள் அரசியல் லாபத்திற்காக, வாக்கு வங்கி அரசியலுக்காக முத்தலாக் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் எதிர்கட்சிகள் தடுத்து வருகின்றன. சமூகத்தை பலவீனமாக்க வேண்டும் என்பது தான் இவர்களின் எண்ணம். பதவியை விட்டு வெளியேறிய பிறகு அரசு பங்களாவை விட்டு வெளியேற இவர்களுக்கு மனமில்லை. ஆடம்பர பங்களாக்களை விரும்பும் இவர்கள் அரசு திட்டங்களுக்கு தடைபோடுவதையே தங்கள் தொழிலாக செய்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து