முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 போட்டி: ஆஸி.யை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

வியாழக்கிழமை, 28 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக இழந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டி20 போட்டி பர்மிங்ஹாமில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது

இதையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியா அணி 72 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன்பின் பிஞ்ச் உடன் ஆஷ்டன் அகார் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய பிஞ்ச் அரைசதம் அடித்தார். பின் ஆஸ்திரேலியா அணி 19.4 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன், அடில் ரஷித் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களும், லியாம் பிளங்கீட் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து