முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்கள் விசாரணைக்கு கேரள முதல்வர் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

கோட்டயம்: கேரள மாநிலம் கோட்டயத்தை தலைமையிடமாக கொண்ட மலங்காரா ஆர்த்தோடக்ஸ் சர்ச்சில் பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 பாதிரியார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள முதல்வர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து சர்ச் செயலாளர் பிஜூ ஊமென் தெரிவித்ததாவது: பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பாதிரியார்களின் மோசடியை பற்றி புகார் கொடுத்ததன் அடிப்படையில் உடனடியாக அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சர்ச் மிகவும் பொறுப்போடு செயல்பட்டு வருகிறது. இன்றைய நிலையில் இவர்கள் ஐந்துபேரும் சந்தேகத்துக்குரியவர்களாக உள்ளனர். இப்புகார் குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வந்த பிறகு இவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரில், ஒரு பாதிரியார் முதலில் எனது மனைவியை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். அதை தொடர்ந்து மற்றொரு பாதிரியாரிடமிருந்து உதவி கேட்டபோது அந்த நபரும்கூட என் மனைவியை மிரட்டியுள்ளார். அவருக்கு இன்னொரு பாதிரியாருடன் தொடர்பு இருந்திருக்கிறது.

இப்படியே சர்ச்சை சேர்ந்த ஐந்து பாதிரியார்களும் என் மனைவியை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டனர் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அந்த புகாரில் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

இப்பிரச்சினை குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருவதால் ஆர்த்தோடக்ஸ் சர்ச் பற்றிய இமேஜ் கடுமையாக சிதைக்கப்பட்டு வருவது எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. சமூக வலைதளங்களில் சுயநல நோக்கோடு சர்ச்சுக்கு தவறாக விளம்பரப்படுத்தி நாங்கள் சந்தேகப்படும் நிலையில் இருக்கிறோம். சர்ச் ஆர்த்தோடக்ஸ் சர்ச் மோசமான செய்திகளில் அடிபடுவதால் நாங்கள் நிச்சயமாக வேதனையடைந்துள்ளோம். இவ்வாறு ஊமென் தெரிவித்தார். எனினும், பாதிக்கப்பட்ட பெண் இதுவரை காவல்நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின்  கணவர் பாதிரியார்கள் பேசிய ஆடியோ கிளிப்பை கண்டுபிடித்து வெளியிட்ட பிறகு இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து