முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பா.ஜ.க. தலைவர் மாற்றமா? முரளிதர ராவ் டுவிட்டரில் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பில் மாற்றம் வர உள்ளதா என்பது குறித்து, அக்கட்சியின் தமிழக விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் பொதுச் செயலாளர் முரளிதர ராவ் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்து வருகிறார். அண்மைக் காலமாக அப்பதவியில் இருந்து தமிழிசை  நீக்கப்பட்டு வேறொருவர் அமர்த்தப்படலாம் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. பதவிக் காலம் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ளதாகவும், வேறொரு தலைவரை நியமிப்பது குறித்து கட்சித் தலைமை தான் முடிவெடுக்கும் எனவும் தமிழிசை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவும் கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக பா.ஜ.க. விவகார பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவிடம் நான் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ள நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் மாற்றம் வரும் என ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் உண்மையில்லை. அந்த கருத்துகள் உண்மைக்குப் புறம்பானது மற்றும் விஷமத் தன்மை வாய்ந்தது என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து