முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கால்பந்து நாக்-அவுட் சுற்று இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா - பிரான்ஸ் மோதல்

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

கசான்: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று தொடங்கும் நாக்-அவுட் சுற்று முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா - பிரான்ஸ் மற்றும் உருகுவே-போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.

32 அணிகள்...
21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த 14-ந்தேதி ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. ‘லீக்’ சுற்றில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறைமோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

16 அணிகள் தகுதி...
‘லீக்’ ஆட்டங்கள் வியாழக்கிழமையுடன் முடிந்தன. இதன் முடிவில் உருகுவே, ரஷ்யா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்’, பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஜப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

16 அணிகள் வெளியேறியது
சவுதிஅரேபியா, எகிப்து (‘ஏ’ பிரிவு), ஈரான், மொராக்கோ (பி), பெரு, ஆஸ்திரேலியா (சி), நைஜீரியா, ஐஸ்லாந்து(டி), செர்பியா, கோஸ் டாரிகா (இ), தென் கொரியா, ஜெர்மனி (எப்), துனிசியா, பனாமா (ஜி), செனகல், போலந்து (எச்), ஆகிய 16 நாடுகள் வெளியேற்றப்பட்டன.

முன்னாள் சாம்பியன்கள்...
நேற்று ஓய்வு நாளாகும். 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று (30-ம் தேதி) தொடங்குகிறது. ‘சி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த பிரான்ஸ்- ‘டி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அர்ஜன்டீனா அணிகள் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30-க்கு இந்தப்போட்டி தொடங்குகிறது. இரண்டு அணிகளும் முன்னாள் சாம்பியன் ஆகும். அர்ஜென்டீனா 1978, 1986-ம் ஆண்டுகளிலும், பிரான்ஸ் 1998-ம் ஆண்டி லும் உலககோப்பையை வென்றுள்ளன. இந்த இரண்டு அணிகளில் ஒன்று வெளியேற்றப்பட்டுவிடும்.

2-வது ஆட்டத்தில்....
இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த உருகுவே -‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன. 3-ம் தேதி வரை, 2-வது சுற்று ஆட்டங்கள் நடக்கிறது. கால் இறுதி ஆட்டங்கள் 6 மற்றும் 7-ம் தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ம் தேதிகளிலும், 3-வது இடத்திற்கான போட்டி 14-ம் தேதியயும் நடைபெறுகிறது. இறுதி போட்டி 15-ம் தேதி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து