முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலமான ராணுவத்தை கட்டமைக்க திபெத்தில் சீனா போர்ப் பயிற்சி

சனிக்கிழமை, 30 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனா ஆக்கிரமிப்பு பகுதியான திபெத்தில் அந்நாட்டு ராணுவம் போர்ப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

திபெத்தில் ராணுவம் - மக்கள் இடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கிலும், சீன ராணுவ ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை சோதித்துப் பார்க்கும் நோக்கிலும் இந்தப் போர்ப் பயிற்சி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திபெத்தில் சீனா போர்ப் பயிற்சி செய்துள்ளது. சீன அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் இதழில், வெளியான செய்தியில், திபெத்தில் சீன ராணுவம் போர்ப் பயிற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

திபெத் பிராந்தியத்தில் ராணுவம் - மக்கள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமான நடவடிக்கை இது என்று நிபுணர்கள் கூறியிருப்பதாகவும், எதிர்காலத்தில் பலமான ராணுவத்தை கட்டமைக்க வேண்டும் என்ற அரசின் இலக்கை அங்குள்ளவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இது அமையும் என்றும் குளோபல் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராணுவத்திடம் எரிபொருள் தீர்ந்த போது, உள்ளூர் பெட்ரோல் நிறுவனம் ஒன்று எரிபொருள் வழங்கியதாகவும், லாஸா மாநகர அரசு நிர்வாகத்தின் சார்பில் வீரர்களுக்கு தங்கு தடையின்றி உணவுகள் வழங்கப்பட்டதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து