முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் சாலை விபத்து: 18 பேர் பலி

சனிக்கிழமை, 30 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவிலுள்ள ஹுனான் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பயணிகள் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது, சீனாவின் ஹூனான் மாகாணத்தில் பயணிகளுடன் வந்த பேருந்து மீது லாரி மோதியது. இதில் 18 பேர் பலியாகினர். இரு வாகனங்கள் பெரும் சேதத்துக்குள்ளாகின. இதில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு வாகனங்களும் வேகமாக வந்ததன் காரணமாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சீனாவில் கடந்த சில மாதங்களில் நடந்த மோசமான விபத்ததாக இது கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து