முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

சனிக்கிழமை, 30 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

பிரஸ்சில்ஸ் : உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மேலும் 6 மாதங்களுக்கு ஐரோப்பிய யூனியன் நீட்டித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு உக்ரைன் பகுதியில் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.ஹெச்.17 விமானம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் சுட்டுவீழ்த்தப்பட்டது.

இதில், அந்த விமானத்திலிருந்த 298 பேர் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஐரோப்பிய யூனியன், அதுதொடர்பாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இந்த நிலையில், அந்தத் தடைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க, பிரெஸ்ஸில்ஸில் கூடியுள்ள ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். ஏற்கெனவே, உக்ரைனின் அங்கமாக இருந்த கிரைமியா பகுதியை இணைத்து கொண்டதற்காக ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய யூனியன் மேலும் ஓராண்டுக்கு இந்த மாதம் 18-ம் தேதி நீட்டித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து