முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்துவிட்ட பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர்!

திங்கட்கிழமை, 2 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

லண்டன் : இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவீன் வில்லியம்சன் சந்தித்து மறுத்து விட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டன், பக்கிம்காம்ஷைர் ஆகிய நகரங்களில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும் "பிரிட்டன்-இந்தியா வாரம்' என்ற பெயரில் இரு நாள் மாநாடும், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரிட்டனைச் சேர்ந்த அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில், பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா, நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கலந்து கொண்டார். விடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய நிதி மற்றும் ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயலும் பங்கெடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக பிரிட்டனுக்கு அவர் பயணம் செல்லும் திட்டத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வகுத்திருந்தது. ஆனால், அந்த பயணத்தை நிர்மலா சீதாராமன் கைவிட்டு விட்டார்.

இந்நிலையில், பிரிட்டன் பயணத்தை நிர்மலா சீதாராமன் கைவிட்டு விட்டதன் பின்னணி குறித்த தகவல்களை அந்நாட்டில் இருந்து வெளிவரும் "தி சன்டே டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்த பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

லண்டன், பக்கிம்காம்ஷைர் நிகழ்ச்சியில் பங்கெடுக்க பிரிட்டனுக்கு வரும்போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் கவீன் வில்லியம்சனை ஜூன் 20 முதல் 22ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார். அப்போது இருதரப்பு பாதுகாப்பு விவகாரம், பாதுகாப்பு தளவாட கொள்முதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்த அவர் முடிவு செய்திருந்தார்.

இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்கும்படி, வில்லியம்சனிடம் இந்திய அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு முன்பே கோரிக்கை விடுத்தனர். ஆனால், நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்கு வில்லியம்சன் மறுத்து விட்டார். வில்லியம்சனை சமாதானப்படுத்தி, நிர்மலா சீதாராமனை சந்திக்க வைப்பதற்கான முயற்சிகளில் பிரிட்டன் நிதியமைச்சர் உள்ளிட்ட 2 அமைச்சர்கள் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து விட்டது. இதைத் தொடர்ந்தே, பிரிட்டன் பயணத்தை நிர்மலா சீதாராமன் கைவிட்டு விட்டார்.

நிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்த காரணத்துக்காக, வில்லியம்சனிடம் பிரிட்டன் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பலரும் கடிந்து கொண்டனர். அப்போது அவர்கள், உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்வதையும், ஆண்டுக்கு 50 பில்லியன் டாலர்களை ஆயுத கொள்முதலுக்கு மட்டும் இந்தியா செலவிடுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்ததை வில்லியம்சனின் மற்றொரு மோசமான முடிவு என்று பிரிட்டன் அமைச்சர்கள் பலரும் குற்றம்சாட்டினர் என்று "தி சன்டே டைம்ஸ்' பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் மறுப்பு:

இந்த செய்தி குறித்து, டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும்நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பதிவுகளில், "இது அடிப்படை முகாந்திரமில்லாத செய்தி. இரு நாடுகள் இடையே சிறப்பான நல்லுறவு உள்ளது. 2 பேரும் சந்தித்து பேசுவதற்கான ஏதுவான தேதி திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து