முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் கூடியது காவிரி ஆணையக் கூட்டம்: தமிழக, கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்பு

திங்கட்கிழமை, 2 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், டெல்லியில் நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில், நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது, நிரந்தர அலுவலகம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவுக்கு வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்துள்ளது. ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வளத் துறை ஆணையர் மசூத் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையத்தின் உறுப்பினர் - செயலராக மத்திய நீர்வளத்துறை தலைமைப் பொறியா ளர் ஏ.எஸ்.கோயல், உறுப்பினர்களாக மத்திய அரசு மற்றும் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச் சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், ஆணையம் அமைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கர்நாடகா முடிவு எடுத்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று காலை தொடங்கியது. இதில் தமிழகம் சார்பில் பொதுப்பணித் துறை செயலா ளர் எஸ்.கே.பிரபாகர், கர்நாடகா சார்பில் நீர்வளத் துறை செயலாளர் ராகேஷ் சிங், கேரளாவின் நீர்வளத் துறை செயலாளர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி சார்பில் பொதுப்பணித் துறை ஆணையர் அன்பரசு ஆகியோர் பங்கேற்றனர்.

முதல் கூட்டம் என்பதால் ஆணையம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது, நிரந்தர அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவுக்கு வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்குவது போன்ற அடிப்படை விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து