முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்று: ஸ்பெயினை வீழ்த்தி ரஷ்யா காலிறுதிக்கு முன்னேறியது

திங்கட்கிழமை, 2 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

மாஸ்கோ : உலகக் கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்று போட்டியில் ஸ்பெயினை தோற்கடித்து ரஷ்யா காலிறுதிக்கு முன்னேறியது.

போராட்டம்...

நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி, போட்டியை நடத்தும் ரஷ்ய அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 11வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் செர்ஜியோ ரமோஸ் ஒரு கோல் அடித்தார். பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க நீண்ட நேரம் போராடினர். ஒரு வழியாக ரஷ்ய வீரர் அர்டெம் ட்ஸூபா கோல் அடிக்க போட்டி சமன் ஆனது. அதன் பிறகு முதல் பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை.

கூடுதல் நேரம்...

இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் உக்கிரமாக விளையாடினர். இரு அணி வீரர்களின் முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. அதனால், இரண்டாவது பாதி முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது. இதனால், கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால், கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே சென்றனர்.

ரஷ்யா வெற்றி...

பின்னர், போட்டி பெனால்டி ஷூட் முறைக்கு சென்றது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. முதல் இரண்டு வாய்ப்பில் இரு அணிகளும் கோல் அடித்தன. ஆனால், ஸ்பெயின் அணி 3வது வாய்ப்பை தவறவிட்டது. அதேபோல், 4வது வாய்ப்பில் கோல் அடித்தாலும் 5வது வாய்ப்பை ஸ்பெயின்  கோட்டை விட்டது. ரஷ்யா அணி முதல் 4 வாய்ப்பிலும் கோல் அடித்து அசத்தியது. இதனால், ரஷ்ய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலியுறுதிக்கு முன்னேறியது.
இதில் மேஜிக் என்னவென்றால் வெற்றியை உறுதி செய்யும் ஸ்பெயின் அணியின் 5வது வாய்ப்பில் கோல் கீப்பர் பந்தை கோட்டை விட்டாலும் அவரது காலில் எதிர்பாராமல் பந்து பட்டு வெளியே சென்றுவிட்டது.

உற்சாகம்....

உலகக் கோப்பையில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா, போர்ச்சுகல் அணிகள் வெளியேறிவிட்ட நிலையில், தற்போது அனுபவம் வாய்ந்த ஸ்பெயின் அணியும் நாக் அவுட் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது. தரவரிசையில் 70வது இடத்தில் உள்ள ரஷ்ய அணி ஸ்பெயின் அணியை வெளியேற்றியது அந்நாட்டு ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

1966-ம் ஆண்டிற்கு பிறகு ரஷ்யா அணி காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிபர் புதின் பாராட்டு

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ரஷிய வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்காவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பெயின் - ரஷியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் ஆரம்பம் முதல் முடிவு வரை அதிபர் புதின் கண்டுகளித்தார். சிறப்பாக விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து