முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்மார்கை வீழ்த்தி குரோஷியா வெற்றி

திங்கட்கிழமை, 2 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆகிய அணிகளை வெற்றி கொண்ட குரோஷியா அணி தனது 2-வது சுற்றில் டென்மார்க் அணியை எதிர் கொண்டது. பரபரப்பாக துவங்கிய ஆட்டத்தில் முதல் நிமிடத்திலே டென்மார்க் அணியின் சார்பில் மேத்யஸ் ஜோர்ஜென்சன் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 4 நிமிடத்தில் குரோஷியா வீரர் மேரியோ 1 கோல் அடித்து அசத்தினார். அதன்பிறகு நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணியினரும் மேலும் கோல் ஏதும் அடிக்காததால் முதல் பாதி நேர ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணியினராலும் கோல் அடிக்க முடியவில்லை. கிடைத்த அருமையான பெனால்டி வாய்ப்பை குரோஷியா வீரர் லூகா வீணடித்தார். இதனால் இந்த ஆட்டத்திலும் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையே பின்பற்றப்பட்டது. அதில் குரோஷியா அணி  3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் மூலம் டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றிபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து