முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஜ்ரங்கி பாய்ஜான் படம் மூலம் பிரபலமான பாக். செய்தியாளர்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

கராச்சி: பாலிவுட் படமான பஜ்ரங்கி பாய்ஜான் மூலம் வைரலான பாகிஸ்தான் செய்தியாளர் சந்த் நவாப் தற்போது மீண்டும் ஒரு வீடியோ மூலம் வைரலாகி உள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் இருந்துதான். அந்த படம் இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளிலும் ஹிட் அடித்தது. அந்த படத்தில் நடித்த நடிகர் நவ்சுதின் சித்திக் வாய்ப்பு கிடைக்காத, கேமரா முன்பு தவறாக பேச கூடிய திறமையற்ற காமெடியான பத்திரிக்கையாளராக நடித்திருப்பார். பாகிஸ்தான் செய்தியாளர் சந்த் நவாப் உண்மையிலேயே உண்மையாகவே கேமராவை பார்த்து நடுங்கும் செய்தியாளர்.இவர் திக்கித் திக்கி பேசக்கூடிய நபர்.

இவர் கேமரா முன்பு சொதப்பிய வீடியோ பல இணையத்தில் தற்போது வைரல் ஆகியுள்ளது. முக்கியமாக கராச்சி ரயில் நிலையத்தில் கருப்பு டிக்கெட் விற்கப்படுவது குறித்தும் இவர் வீடியோ வெளியிட்டதுதான் பெரிய அளவில் வைரல் ஆனது. அந்த சீனை பஜ்ரங்கி பாய்ஜான் படத்திலும் வைத்துள்ளனர். இதற்காக அவர் அப்போது போலீசிடம் அடி கூட வாங்கினார்.

இந்த நிலையில் சந்த் நவாப்பின் மற்றொரு வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது. சுவீட் கடை ஒன்றில் இவர் தவறாக பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் கேமராமேன் பெயரை கூட தவறாக உச்சரித்து கடைசியில் நிறைய சுவீட்களை தின்று விட்டு இவர் செல்வது பெரிய வைரலாகி உள்ளது. இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளிலும் தற்போது இவரது வீடியோவை ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து