முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் புதிய அரசை அமைக்க முயற்சி மெகபூபாவுக்கு எதிராக அணி திரளும் ம.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்: காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கு எதிராக மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மெகபூபாவை ஓரம்கட்டி விட்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அரசை அமைக்க அவர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.க.வும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. இந்நிலையில் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது. இதனால் மெகபூபா பதவி விலகினார். அங்கு தற்போது கவர்னர் ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், மெகபூபா முப்திக்கு எதிராக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் போர்க்கொடி எழுப்பியுள்ளனர். மெகபூபாவின் குடும்ப ஆட்சி மற்றும் பேராசை காரணமாகவே கூட்டணி உடைந்து, ஆட்சி பறிபோனதாக அக்கட்சி தலைவர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர். முன்னாள் அமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர்களில் ஒருவருமான அன்சார் கூறுகையில், ஜம்மு - காஷ்மீர் அரசை சரியான முறையில் வழிநடத்த மெகபூபா தவறி விட்டார். கட்சியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

இதுபோலவே, அந்த கட்சியைச் சேர்ந்த மேலும் இரு எம்.எல்.ஏ.க்களும் மெகபூபாவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். மெகபூபாவை ஒரம்கட்டி விட்டு பா.ஜ.க.வுடன் இணைந்து மீண்டும் கூட்டணி அரசு அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காக மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டி வருகின்றனர். போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தால் காஷ்மீரில் மீண்டும் கூட்டணி அரசு அமையலாம் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து