முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்பாப்வேக்கு எதிரான டி-20 போட்டியில் 172 ரன்கள் குவித்து ஆஸி. வீரர் ஆரோன் பிஞ்ச் உலக சாதனை

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

ஹராரே : ஜிம்பாப்வேக்கு எதிராக நேற்று நடந்த சர்வதேச டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

229 ரன்கள்...

சர்வதேச டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடந்து வருகின்றன.  இந்த நிலையில் நேற்று நடந்த 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடின.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சினை தேர்வு செய்தது. இதனை அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்தது.  அந்த அணியின் ஆரான் பின்ச் 76 பந்துகளில் 172 ரன்கள் எடுத்துள்ளார்.  இதில் 16 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்களும் அடங்கும்.  அவருடன் விளையாடிய ஷார்ட் 42 பந்துகளில் 46 ரன்கள் (3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்துள்ளார்.

உலக சாதனை...

ஆரன் பின்ச் 172 ரன்கள் எடுத்தது உலக சாதனை ஆகும்.  இதற்கு முன்பு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 156 ரன்களை எடுத்து பின்ச் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த தனிநபர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.  இவற்றில் 11 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்சர்கள் அடங்கும்.  தனது சொந்த சாதனையை பின்ச் நேற்று முறியடித்து உள்ளார். இதே போன்று பின்ச் மற்றும் ஷார்ட் இணை கைகோர்த்து 200 ரன்களை எடுத்துள்ளது.  இது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதன்முறை என்ற சாதனையை பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து