முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராட்டும் திட்டும் ஒன்றும் செய்யாது: நெய்மர்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

கடந்த இரண்டு போட்டிகளில் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்து வந்த நெய்மர், இந்த முறை செய்தியாளர்களிடம் விரிவாக பேசினார். அப்போது, நேரத்தை வீணடிக்கிறார் என்ற விமர்சனம் குறித்து நெய்மரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு லேசாக சிரித்துக் கொண்டே பதில் அளித்த நெய்மர், “பயிற்சியாளர்களை நாங்கள் மதிக்கிறோம். மெக்ஸிகோவின் பயிற்சியாளர் சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கிறேன். திறமை வாய்ந்த மெக்ஸிகோ வீரர் ஓசோவாவை எங்களுக்கு தெரியும். நான் ஒரு பிரேசிலியன். என்னுடைய விடாமுயற்சி கடைசி வரை இருந்தது. நாம் கஷ்டப்பட கற்றுக் கொள்ள வேண்டும். இது மிகவும் கடினமான மேட்ச்.

இது என்னையும் என்னுடைய அணியையும் வலுவிழக்கச் செய்யும் முயற்சி. அதனால், விமர்சனங்கள் குறித்து அதிகம் கவலைப் படுவதில்லை. அதேபோல் தான் பாராட்டுக்களையும். விமர்சனங்களும், பாராட்டுக்களும் ஒரு விளையாட்டு வீரரின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த இரண்டு போட்டிகளின் போது நான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும் என்பதே அதற்கு காரணம். என்னுடைய சக வீரர்களுடன் சேர்ந்தே நான் வெற்றியை எட்டுவதற்கு இங்கு உள்ளேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து