முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்து: இலங்கை பெண் அமைச்சர் மீது அதிபர் சிறிசேனா நடவடிக்கை

புதன்கிழமை, 4 ஜூலை 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இலங்கை பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது கடும் நடவடிக்க எடுக்க அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் உருவாக...
இலங்கை பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். தமிழரான இவர் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர். குழந்தைகள் நலத்துறையை கவனித்து வரும் விஜயகலா யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘‘இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகம் நடைபெற்ற போது சமூகத்தில் எந்த குற்ற சம்பவமும் நடைபெறவில்லை. இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை’’ என்றார்.

கடும் நடவடிக்கை
இந்த பேச்சு இலங்கை பாராளுமன்றத்தில் கடும் அமளியும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அமைச்சர் விஜயகலாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதுகுறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா கருத்து கூறியுள்ளார். அதில், ‘‘ராஜாங்க அமைச்சர் பதவியில் உள்ள ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட முடியாது என்றார். மேலும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து