முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக மாநில காங். தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம்

புதன்கிழமை, 4 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் பதவி ஏற்றனர்.  இதையடுத்து இரு கட்சிகளிலும் இலாகாக்களை பங்கீடுவதில் பிரச்சினை நிலவியது. மேலும் மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். கட்சி தலைவர்கள் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து அவர்கள் அமைதியாக இருந்து வருகிறார்கள்.

நியமனம்

இந்தநிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த ஜி.பரமேஸ்வரா மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தினேஷ் குண்டுராவ் மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  தினேஷ் குண்டுராவ் காந்திநகர் தொகுதியில் இருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  2019 லோக் சபா தேர்தலை கருத்தில் கொண்டு இவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  கர்நாடகா காங்கிரஸ் துணை தலைவராக ஈஸ்வர் கண்ட்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   கடந்த  கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் இவர் மந்திரியாக இருந்தார். இவர் பால்கி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து