முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமலை போல மேலும் சில நடிகர்கள் களத்தில் இறங்க வாய்ப்புள்ளது நடிகர் விஷால் பேட்டி

புதன்கிழமை, 4 ஜூலை 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த், கமலஹாசனை போன்றே மேலும் சில நடிகர்களும், புதியவர்களும் போட்டியிட வாய்ப்புள்ளது என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
நடிகர் விஷால் நடிப்பில் சண்டக்கோழி_2 படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தனியார் தோட்டத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் படத்தின் இயக்குனர் லிங்குசாமியே இப்படத்தையும் இயக்குகிறார். கவிஞர் மதன் கார்க்கி, அருண் பாரதி ஆகியோர் பாடல்கள் எழுத யுவன்சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தில் நடிகர் விஷாலுடன், ராஜ்கிரண், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உட்பட பலர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படப்பிடிப்பு இடைவெளியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஷால் கூறியதாவது.
திண்டுக்கல் மாவட்டம் தமிழ் திரைப்பட குழுவினருக்கு ராசியான மாவட்டம் ஆகும். இப்பகுதியில் எடுக்கப்பட்ட பல்வேறு படங்கள் வெற்றி பெறுவதால் இங்கு ஒரு காட்சியாவது எடுக்க வேண்டும் என்று கருதி வந்துள்ளோம். 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட சண்டக்கோழி படம் மாபெரும் வெற்றி பெற்றது. குடும்ப பாங்கான வேடத்தில் நடித்த எனக்கு இப்படம்  தமிழக மக்களிடையே நல்ல பெயர் பெற்று தந்தது. தற்போது அதன் 2வது பாகமும் அதை விட விறுவிறுப்பாக இருக்கும். இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததற்கு நன்றி. தமிழ்த்திரையுலகினர் சார்பில் ஒவ்வொரு மாதமும் 2ம் சனிக்கிழமையை விடுமுறையாக அறிவித்துள்ளோம். அதுபோல் சிவாஜி கணேசன் பிறந்த நாளை தமிழ் திரையுலகினர் விடுமுறை நாளாக அறிவிக்க உள்ளோம்.
கமலஹாசனும், ரஜினிகாந்தும் இணைந்துஅரசியலில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும். வரவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் திரையுலகினரும், புதியவர்களும் அதிக அளவில் போட்டியிடுவார்கள். பல கோடி பணம் செலவழித்து திரைப்படம் எடுக்கப்படுகிறது. அந்த படத்தை மக்கள் தியேட்டரில் வந்து பார்த்தால் தான் தயாரிப்பாளரால் பணம் எடுக்க முடியும். திருட்டு வீடியோவால் இத்தொழில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. சிவகெங்கை மாவட்டத்தில் கேபிள் டி.வி.யில் புதிய படம் ஒளிபரப்பியதால் ரூ.1.32 லட்சம் அபராதம் செலுத்தினர். இதற்கு முடிவு கட்ட ஓய்வு பெற்ற  ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளைக்கொண்டு கண்காணித்து வருகிறோம்.
எனது திருமணம் என்பது ஏற்கனவே நான் கூறியது போல் தான். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிய பிறகு தான் நடக்கும். அதேபோல் 2019ம் ஆண்டு நடிகர் சங்க கட்டிடம் திறந்து முடிந்தவுடன் மக்கள் ஆசியுடன் நடக்கும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து