முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்இறுதிக்குள் நுழைந்தது சுவீடன்

புதன்கிழமை, 4 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் சுவீடன்–சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.முதல் பாதியில் யாரும் கோல் போடவில்லை. பிற்பாதியில் இரண்டு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு தீவிர முனைப்பு காட்டினர். 66–வது நிமிடத்தில் சக வீரர் டோய்வோனென் தட்டிக்கொடுத்த பந்தை சுவீடனின் எமில் போர்ஸ்பெர்க் கோல் அடித்தார். இதையடுத்து 1–0 என்ற கோல் கணக்கில் சுவீடன் முன்னிலை பெற்றது.

முடிவில் சுவீடன் அணி 1–0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது. 1994–ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கால்இறுதியை எட்டிய சுவீடன் அணி அடுத்து இங்கிலாந்து அல்லது கொலம்பியாவை சந்திக்கும். பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் (63 சதவீதம்), ஷாட் அடிப்பதிலும் (18) சுவிட்சர்லாந்து ஆதிக்கம் செலுத்திய போதிலும் அதிர்ஷ்டம் இல்லாமல் போனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து