முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

222 நிறுவனங்களை நீக்க பி.எஸ்.இ முடிவு

புதன்கிழமை, 4 ஜூலை 2018      வர்த்தகம்
Image Unavailable

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 331 போலி நிறுவனங்கள் மீது மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மேலும், செயல்படாத 2 லட்சம் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. தற்போது 222 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை நீக்குவதற்கு பிஎஸ்இ முடிவு செய்துள்ளது.  கடந்த ஆறு மாதமாக 220க்கும் மேற்பட்ட நிறுவனத்தின் பங்குகள்  வர்த்தகமாகாமல் இருப்பதாக கடந்த மே மாதம் பிஎஸ்இ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பிஎஸ்இ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இன்று (நேற்று) முதல் 210 நிறுவனங்களின் பங்குகள் நீக்கப்படுகின்றன. பிர்லா பவர் சொல்யூசன்ஸ்,  ஏசியன் எலெக்ட்ரானிக்ஸ், கிளாசிக் டைமண்ட் இந்தியா, இன்னோவேட்டிங் இண்டஸ்ட்ரீஸ் இதர காரணங்களுக்காக தேசியப் பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து