முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்குதேசம் சார்பில் நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து களமிறங்கும் நடிகை வாணி விஸ்வநாத்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

திருப்பதி : ஆந்திர மாநிலம், நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். கட்சி எம்.எல்.ஏ. நடிகை ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடிகை வாணி விஸ்வநாத்தை களம் இறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆந்திர மாநிலம், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக  நடிகை ரோஜா உள்ளார். ரோஜாவை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான காளிமுத்து கிருஷ்ணம்ம நாயுடுவை மேலவை உறுப்பினராக சந்திரபாபு நாயுடு நியமித்தார். ஆனால் இவர் சில மாதங்களுக்கு முன் உடல் நலம் குன்றி மரணமடைந்தார்.

இந்நிலையில், வரும் 2019 சட்டசபை தேர்தலில் ரோஜாவை எதிர்த்து ஒரு நடிகையை களமிறக்க தெலுங்கு தேசம் முடிவு செய்தது. அதன்படி நடிகை வாணி விஸ்வநாத்தை தேர்வு செய்துள்ளது. சமீபத்தில் நகரிக்கு வந்த வாணி விஸ்வநாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு அழைப்பின்பேரில், விரைவில் தான் தெலுங்கு தேசம் கட்சியில் இணையப் போவதாக அறிவித்தார். நகரி தொகுதியில் வாணி விஸ்வநாத்தையே களம் இறக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஒரு மூத்த நிர்வாகி தகவல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து