முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி அரசின் உத்தரவுக்கு இணங்க மறுக்கும் அதிகாரிகள் - துணை முதல்வர் சிசோடியா குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 5 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி :  அரசின் உத்தரவுகளுக்கு இணங்க அதிகாரிகள் மறுப்பது உச்சநீதிமன்ற அவமதிப்புக்கு சமம் என்பதால், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக துணை முதல்வர் சிசோடியா செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

2014-ம் ஆண்டில், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தில்லி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையிலான அதிகார மோதல் தொடங்கியது. இந்த விவகாரத்தில் டெல்லி ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதை தொடர்ந்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில், டெல்லி அமைச்சரவை குழுவின் ஆலோசனையின்படியே துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும். துணை நிலை ஆளுநருக்கு சுதந்திரமான முடிவு எடுக்கும் அதிகாரம் அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்படவில்லை என்பதால் அரசின் செயல்பாடுகளில் அவர் குறுக்கிடுபவராக இருக்கக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, அதிகாரிகளின் பணியிடமாற்றம் மற்றும் பணி நியமனத்தில் புதிய நடைமுறையை அமல்படுத்தியது.

இந்நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அதிகாரிகள் உத்தரவுகளை பின்பற்ற மாட்டார்கள் என்று தலைமைச் செயலாளர் என்னிடம் தெரிவித்துள்ளார். டெல்லி அரசின் உத்தரவுகளுக்கு அதிகாரிகள் இணங்க மறுத்தால், தன்னிச்சையாக பணியிட மாற்றங்களுக்கான கோப்புகள் துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு செல்லும். அது அரசியல் சாசன அமர்வை அவமதிக்கும் செயலாகும்.

இந்த சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு இணங்கி செயல்படுமாறு அதிகாரிகள் மற்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து