முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணைகள் நீர் இருப்பு பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்வு காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவு

வியாழக்கிழமை, 5 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: அணைகளின் நீர் இருப்பு பற்றி அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய நீர்வளத்துறை கமிஷனர் நவீன்குமார் தெரிவித்தார்.

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை கமிஷனர் நவீன்குமார் தலைமை வகித்தார். தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில தலைமை பொறியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். தமிழகம் சார்பில் தலைமை பொறியாளர் செந்தில்குமார் பங்கேற்றார்.

கடந்த 2-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைனின் தலைமையில் நடைபெற்றது. ஜூலை மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய காவிரி நீரை திறக்க கர்நாடக மாநிலத்திற்கு அப்போது உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் துணை அமைப்பான காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. கர்நாடக, தமிழக அணைகளின் நீர் இருப்பு, தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு போன்றவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் மத்திய நீர்வளத்துறை கமிஷனர் நவீன்குமார் கூறுகையில்,
ஒவ்வொரு அணைகளின் நீர் வரவு, வெளியேற்றம் குறித்து ஆலோசித்தோம். பல்வேறு வகைகளில் நீர் இருப்பு புள்ளி விவரங்களை சேகரிக்க முடிவு செய்துள்ளோம். நீர் இருப்பை சரியாக அளவீடு செய்வது எப்படி என்பது குறித்துதான் அதிகமாக ஆலோசித்தோம். தற்போதுள்ள நடைமுறைகளை தாண்டி, அறிவியல்பூர்வமாக நீர் இருப்பு, நீர் வரத்தை ஆய்வு செய்ய உள்ளோம். அடுத்த 2 வாரங்களில் புதிய நடைமுறைகள் படி 8 அணைகளிலும் உள்ள நீர் இருப்பு அளவீடு செய்யப்படும். இதையடுத்து, வரும்  19-ம் தேதி அடுத்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து